Monday, December 25, 2023

 மார்கழி 9                 டிசம்பர் 25 2023        சுக்ல பட்சம் சதுர்த்தி

திங்கட்கிழமை                                            மாலை 7.45 மணி

              மார்கழி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து சிறு வயதில் மரியாதைக்குரிய பெரியவர் சுப்பிரமணி ஓதுவார் அவர்களுடன் காஞ்சிபுரம் ஏகம்பநாதர் கோவில் மாடவீதி சிறுவர்களுடன் பஜனை பாடி வலம்வந்து கச்சி ஏகம்பனை வழிபாடு செய்ததன் நினைவின் தொடர் நிகழ்வாக இரண்டு ஓதுவார்களை இதற்காக ஏற்பாடு செய்து பெரியவர்கள் நான்கைந்து நபர்களும் சிறுவர்கள் நான்கைந்து பேர்கள் காலை 6.00 மணி முதல் 7.30 வரை ஏகம்பநாதர் கோவில் மாடவீதி பஜனை பாடி வலம்வந்து கச்சி ஏகம்பனை வழிபாடு செய்து வருகின்றோம்.  

         திருமுறைப் பாடல்களுடன்  குறிப்பாக மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை  திருநாவுக்கரசரின்  திருஅங்கமாலையும் தினமும் பாடி வலம் வந்து கச்சி ஏகம்பனை வழிபடுகின்றோம்.

                           தினமும் பாடப்படும் பதிகங்கள்

 

                    சிவமயம்

               திருச்சிற்றம்பலம்

                             

சமயக் குரவர் துதி    


சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம்

தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்

வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே....!

                                        --- திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்



விநாயகர் துதி

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடி கணபதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!


முருகன் துதி

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.


சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்

குமரன் தாதைநற் கோழம்ப மேவிய

அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்

அமர லோகம தாளுடை யார்களே.

 


No comments: